Wednesday, July 12, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - இராமன் பெருமை

திருமாலின் அவதாரம் ஆன நம் இராமனும் !
இலக்குவன் தான் ஆதிசேடன் தன்னுடைய பிறவியே !

ஆழி சங்கும் பிறந்தனர் பரத சத்துருக்கனராய்!
பூவுலக வைகுந்தம் ஆனதே  அயோத்தியா !

இலக்குமியாம் சீதையும்  தான்  பூவுலகம் வந்தனள்!
வானரமாய் வந்தனர் தேவரக்கூட்டம் எல்லோரும்!

ஐயனும் வந்தான் இராவணனாய்!
விஜயனும் தான் கும்பகருணன்!

சீதை தன்னை கவர்ந்து சென்ற இராவணன் தன் கருவத்தை
அடக்கியவன் சிரமருத்து இலங்கை வென்று கொண்டுமே

குமபர்ணன்  தன்னுடைய சிரத்தையும் தான் வென்று நின்று
இராமனிடத்தில் சரணடைந்த வீடணற்கு முடி தரித்து

பரமசிவன் உருவமான அனுமனுக்கு அபயம் தந்து
தம்பிகளும், வானரமும் சீதையுடன் கூடவே

இலங்கை விட்டாயோத்தி சென்று உலகமெலாம் புகழவே
முடி தரித்து உலகமாண்ட இராமன் புகழ் பாடுவோம் !

ராம ராம ராம ராம ராம நாமம் வாழ்கவே!
கலியுகத்தில் நம்மைக் காக்க வேறெவரும்  இல்லையே!

No comments:

Post a Comment