Monday, July 17, 2017

தொல்காப்பியரும் அவர் தம் ஐந்து தலைமுறைகளும்


திருமகள் தன் தந்தை நம் பார்கவ முனிவன்
அவன் திருப்பாதம் போற்றிடுவோம் நாம் அனைவரும்

ஸ்யவனன் முனிவானமே பார்கவர் புதல்வன்
அவன் திருவடிகள் சிரசில் வைத்துத் தொழுதிடுவோமே!

ஆப்னவானன்   மஹரிஷியாம்  ஸ்யாவனர் மகன்
அவர் திருவடியின் நிழல் தன்னிலே வாழந்திடுவோமே!

அவுருவன் தன் திருப்பாதம் போற்றிடுவோமே
அவன் ஆப்னவானன்  திருமகனாம் அறிந்து கொள்வோமே

ஜமதக்கினி முனிவர் பெருமை பாடிப் பரவுவோம்
அவுருவன்  தன்  புத்திரனாம் அறிந்து கொள்வோமே

இரேணுகாம்பை  ஜமதக்கினி தன் மனைவியாம்
மாரியம்மன் என்று அவளைத் தெரிந்து  கொள்வோமேன்!

பரசுராமன் அவன் பெருமை நாடும் அறியுமே
அவன் மழு எரிந்து தமிழகத்தை  தந்த முனிவனாம்  (அகநானூறு)

ஜமதக்கினி முனிவர் பெற்ற தவப் புதல்வனாம் அவன்
கையில் மழுவும் கொண்டதனால் பரசுராமனாம்

பரசுராமன் தம்பி ஆகும் புண்ணியன் பெயர் தான்
திருணதூமாக்கினி என்று சொல்லும் இலக்கியம் (தொல்காப்பியம்)

அகத்தியனார் செய்த ஆதி இலக்கண நூல்கள்
ஐந்திரமாம் வியாகரணம் வேத சாத்திரம்

நான்கு வேதம் கற்றுணர்ந்த புண்ணியனாம் நம்
தொல்காப்பியன் என்று சொல்லும் திருணதூமாக்கினி

இடை சங்கம் தந்திட்ட நம்  தொல்காப்பியனை
ஊனும் உயிரும் உள்ளவரை என்றும் மறவோமே!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த முனிவர்கள் பெருமை
நம் தமிழ் வளர்த்த முனிவர்களின் பெருமை பாடுவோம்.

1 comment:

  1. நிறைய புதிய செய்திகள். ஆச்சரியமாக இருக்கிறது. மழு எறிந்து தமிழகம் உருவானது. எந்த பாடல். பாடல் எண் சொல்ல முடியுமா?

    ReplyDelete