அன்னை உன்னை போற்றுகின்றேன் இன்றும் என்றுமே
என்னை ஒரு ஆளாக்கிய பெருக்கும் நீ
உயிரும் உடலும் உணர்வும் மொழியும் தந்து
வயிறும் நோக்கா வண்ணம் உந்தன் அன்புப்பால் ஊட்டி
மண்ணின் பெருமை காக்க எனக்கு வீர உணர்வுமே தந்திட்டு
கண்ணின் இமை போல் என்னைக் காத்த பாரத மாதாவே
என்ன சொல்வேன் உன்பெருமை இந்தப் பாரிலே
உன்னைப் போல ஒரு நானும் இல்லை உலகிலே
அன்பும் பண்பும் அறமும் தந்து
ஆவி உடல் நரம்பில் நெஞ்சில் நின்று
என்னை உந்தன் அன்பினாலே என்றென்றும் ஆட்கொண்டு
உன்னை எந்த தாயாக உணர வாய்த்த பேரணங்கே!
தமிழும் நீயே வாடா மொழியும் நீயே படையெடுத்த
கயவர்கள் தலையைக் கொய்த வீராங்கனையே!
அம்மா உந்தன் பேரை சொல்ல ஊறுது வீரம் என்னுள்
சும்மா உன்னை நினைத்தாலே ஜென்மம் தன்னியம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
வல்ல தமிழும் வாழ்க குமாரி அன்னையும் தானே !
No comments:
Post a Comment