கள்ளருந்தும் கயவர்களை என்னவென்று சொல்லுவேன்
கள்ளருந்தி கண்ணை மூடி காணும் இடத்தில கிடந்துமே
மனமழிந்து மதியும்கெட்டு மண்ணைக் கவ்வும் மடையர்கள்
மதியிழந்து மானம்கெட்டு தன்னை மறக்கும் கடையோர்கள்
மதுவும் களவும் கொலையும் ஹிம்சை
மாதும் இவைகள் ஐம்பெரும் பாதகங்கள் ஆகுமே
மதுவை அருந்தி மதியும் இழந்த மாந்தர் பின்பு
மாது முதல் மற்ற மூன்று பாவங்கள் செய்வர் எளிதில்
உலகில் உள்ள பாவங்கள் அனைத்திற்கும் மூலம்
உலகில் உள்ள ரோகங்கள் எல்லாமே மதுவினாலே
மதுவை உண்டவர்க்கு உண்டாம் நரகத்தில் வாசம்
மதுவின் சொட்டுக்கொரு ஆண்டு என்று கணக்கில்
உண்ணற்க உண்ணற்க உண்ணற்க மதுவை
செய்யற்க செய்யற்க செய்யற்க பானம்
No comments:
Post a Comment