வஞ்சகனாம் வெள்ளைக்காரன் சொன்ன கதைகளை
நெஞ்சத்தில் கொண்டு பொய்யாய் பேசுகின்ற மாந்தர்கள்
ஆரியமும் திராவிடமும் பேசி காலம் கழிப்பரே!
காரியமும் செய்யாமல் காலம் கழிக்கும் வீணர்கள்
சாதி பேதம் சமய பேதம் மொழியில் பேதம் பேசியும்
ஆதி பொருளின் பிள்ளைகளே அனைவரும் ஆவர்
ஒரே குலம் ஒரே தேவன் மொழியும் ஒன்றே
ஒரே இனம் மனித இனம் என்பதை மறந்து
மொழியில் பேதம் சொல்லி சொல்லி நம்மைப் பிரித்தும்
புவியில் வாழும் பாவிகளை ஒலித்தால் வேண்டும்
வேதம் தரும சாத்திரங்கள் உள்ள ஆரியம்
பேதம் இன்றி எல்லோரும் பேசும் தமிழும்
ஆதியான சிவபிரானின் படைப்புகள் தாமே
சோதியான கடவுள் தந்த மொழிகள் இரண்டும்
உள்நாட்டில் உன்னதமாய் உள்ள மொழிகளே
வெளிநாட்டில் இருந்து வந்த மொழி ஆங்கிலமே
ஆங்கிலத்தை கற்கும் மூடர் பெருமை கொண்டும்
ஏனையோரை பரிகாசித்தால் மாற வேண்டுமே
துருக்க நாடு மொழியாம் அரபி பாரசீகமும்
சிறக்க பேசும் மூடர்களை என்ன சொல்லுவேன்?
மென்மையான தமிழ் மொழியின் சிறப்பு பெரியது
தொன்மையான தாய் மொழி தான் காத்துக்கினியது
பீஜ மந்திரம் கொடுத்த மொழியும் பெரியது
வேத மந்திரம் அளித்த மொழியும் பெரியது
தாய்மொழியாம் தமிழ் மொழிதான் வாழ்க வாழ்கவே!
தாய் நாட்டின் ஆரியமும் வாழ்க வாழ்கவே!
படை எடுத்து வந்த கயவன் தந்த மொழியது
படை கெடுத்த துருக்கர் மொழி வீழ்க வீழ்கவே!
பஞ்சு விற்க வந்த வெள்ளை பிச்சைக்காரன்
நெஞ்சு தானில் கருமை கொண்ட நயவஞ்சகர்
ஆங்கிலத்தில் பேசி பேசி தமிழை ஒழித்த
ஆங்கிலமாம் அந்நியரின் பாஷை அதுவுமே
வீழ்க வீழ்கவே
நாத்தீகம் பேசி நயவஞ்சமாய் (தமிழ்) இனத்தைப் பிரித்த
கயவர்கள் தம் சூழ்ச்சிகளும் வீழ்க வீழ்கவே !
No comments:
Post a Comment