திருப்பாற்கடல் தன் மகளாம் பார்க்கவன் புதல்வி
கருநீல மேனி மாலைக் கைப் பிடித்தாளே
வெள்ளி தங்கம் போல வண்ணம் கொண்ட திருமகள்
சுள்ளி விலுவ மரத்தினாலே வேள்வியும் கொள்வாள்
பெண்கள் நெற்றி வீட்டின் நிலவில் நித்தியம் இருப்பாள்
கண்கள் இமையும் போல மாலும் அவளும் இருப்பார்
பெற்ற தாயைப் போல பக்தர் துயரம் துடைப்பாள்
கற்ற சேய்கள் தம்முடைய வினைகள் அறுப்பாள்
திருமாலின் திருமார்பில் நித்தியம் உறையும்
திருமங்கை திருப்பாதம் போற்றி போற்றியே !
No comments:
Post a Comment