பச்சை மாவின் விளக்கினாலே படையல்கள் வைத்தோம்
இச்சை உடன் பச்சடியும் பாயசம் பருப்பும்
நீறு மோரும் பானகமும் அப்பம் ்வடையும்
சோறு கறியும் வடையுடேனே அப்பம் பாயசம்
தலை வாழை இலையினிலே உனக்கே படைத்தோம்
இலை பூக்கள் கொண்டு உன்னை பூசனை செய்தோம்
ஆசனாதி அர்க்கிய பாத்திய நைவேத்தியமும்
தூப தீப நமஸ்காரங்கள் உனக்கே அம்மா
அம்மை காய்ச்சல் குட்டரோகம் கை கால் குடைச்சல்
வாந்தி பேதி தலை சுற்றல் வயிற்று வலியுமே
நகச்சுற்று நரை மஜ்ஜை எலும்பு ரோகமும்
புற்று நோயும் காசமுமே முட்டியதன் வீக்கங்களும்
உஷ்ண வாயு சீத பேதி உள்ளிருக்கும் ரோகமெல்லாம்
நீரிழிவும் இரத்தத்தின் கொதிப்பு நீக்கி எம்மை காரும்
குற்றம் குறை இருந்தாலும் பொறுத்து எம்மை காக்க வேண்டும்
சுற்றம் எல்லாம் சூழ வந்துன் பொற்பாதம் வணங்கி நின்றோம்
எங்கள் நாடு எங்கள் ஊரு எங்கள் வீடு சுற்றத்தையும்
எங்கள் சேனை ஆயுதங்கள் அனைத்தையுமே காக்க வேண்டும்
எதிரிகளின் சேனைகளும் உள்ளே புகுந்திடாமலே
எதிரிகளின் ஏவுகணை எங்களைத் தான் தாக்காமல்
எங்கள் மன்னர் மந்திரிகள் எங்கள் நாட்டு பிரஜைகளும்
சூனியன்கள் பில்லியுடன் சூழ்ச்சி ஏவல் மாயங்களும்
எங்களைத் தான் அணுகிடாமல் என்றென்றும் காக்க வேண்டும்
போரென்று வந்து விட்டால் வெற்றி அருள வேண்டுமம்மா
கொள்ளுமழை பேய வேண்டும் உழவர் பயிர் சிறக்க வேண்டும்
நல்ல மழை பேய வேண்டும் நதி குளங்கள் நிறைய வேண்டும்
நகரங்கள் கோட்டைகள் நாடெல்லாம் இருக்க வேண்டும்
நிகரில்லாச் செல்வங்கள் எம்நாட்டில் நிறைய வேண்டும்
சாதி மத பேதமின்றி நாடெல்லாம் மகிழ வேண்டும்
ஆதியான அம்மாவே எமக்கருள வேண்டும் நீ
அருள் மாரி பொழிந்திடம்மா அடியோரைக் காத்திடம்மா
பொருள் இன்பம் வீட்டுடன் அறம் தந்து காத்திடம்மா
பரசுராமன் தாயே நீ பாரத்தைக் காத்திடம்மா
தமிழ்நாட்டைக் காத்தது போல் தரணி எல்லாம் காத்திடம்மா
அம்மம்மா உன் பெருமை சொல்லாத தான் முடிந்திடுமோ?
குழந்தைகள் எங்களையும் என்றென்றும் காத்திடம்மா !
வேதம் பசுவும் பார்ப்பனரும் முதியோர் சிசுக்கள் பத்தினிகள்
தர்மிஷ்டர் அனைவரையும் காத்தருள வேண்டுமம்மா !
No comments:
Post a Comment