முக்கண்ணன் பெருமானாம் கடவுள் தமிழுக்கே
தீவண்ணன் தானும் நின்றான் தமிழ் சங்கத்தில்
தீவண்ணன் தானும் நின்றான் தமிழ் சங்கத்தில்
அழகின் பெயரே முருகன் அந்த அழகன் தானும்
பழகி நின்று முதல் சங்கம் தானும் அமர்ந்தான்
குறுமுனி அவன் வந்தானே தென்புலம் காக்க
பெருமுனியும் தந்தானே அகத்தியம் எனும் நூல்!
தமிழ்ப்புலவன் நக்கீரன் புகழும் பெரியதே
தமிழ் வளர்த்த சங்கம் தன்னில் ஆனான் அங்கமே !
தொன்மையான காப்பியத்தை இயற்றி இலக்கணம்
மென்மையான தமிழில் சொன்னான் தொல்காப்பியமே
வட மொழியும் தமிழும் சேர்த்து செய்யும் செய்யுளாம்
வடமொழி சொல் சேர்த்தால் தமிழில் தப்பும் இல்லையே
என்று சொன்னான் தொல்காப்பியன் வேத வித்தகன்
ஐந்திரமாம் வியாகரணம் கற்ற வித்தகன் (திருணதூமாக்கினி))
இரேணுகாம்பா ஜமாத்திக்கினி தந்த நல்மகன்
பரசுராமன் தம்பி தந்த தொல்காப்பியமும்
தமிழ் வளர்த்த மாமுனிவர் எல்லோரும் வாழ்கவே!
தமிழ் வளர்த்த புலவர்களாம் புனிதர்களும்வாழ்கவே !
வாழ்க வாழ்க சிவனும் குகனும் வாழ்க கும்ப முனியும்!
வாழ்க பரசுராமன் அவன் தன் அருமை தம்பியும்!
வாழ்க சங்க தமிழும்! வாழ்க சங்க புலவர் எல்லோரும்!
தமிழைத் தாய் மொழியாய்க் கொண்ட புண்ணியர் வாழியே!
No comments:
Post a Comment