Thursday, July 13, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - வேத சிறப்பு

வேத சிறப்பு 

உருவம் இல்லாத அந்தப் பரம்பொருள்
அருவம் உருவம் ஆன பரப்பிரம்மம்

வேதமே அந்தப் பிரம்மத்தின் சுவாசம்
வேதமே படைப்பிற்கு ஆதாரம்

வேதமே உலகின் முழுமுதல் கிரந்தம்
வேதமே மானிடருக்கு என்றும் வழிகாட்டி

வேதமே பாரதத்தின் கலாச்சாரம்
வேதமே நான்காகி ஓதப் பெரும் பரம பவித்திரம்

வேதத்தை என்றும் நாம் காக்க வேண்டும்
வேதத்தை என்றும் நாம் வளர்க்க வேண்டும்

புருட சூக்தம் 

ஆயிரம் தலைகள் கொண்ட அந்த புருடன்
ஆயிரம் கண்கள் கால்களும் ஆயிரமே

பூவுலகம் எங்கும் நிறைந்தவன் புருடன்
அதற்கும் அங்குலங்கள் பத்து அதிகமானவன் புருடன்

No comments:

Post a Comment