Friday, July 28, 2017

अखण्ड भारत पञ्चकम्

हिमालय समरम्भाम् विन्ध्य परवथ मध्यमां
द्रविड लङ्काधि संयुक्तां वन्दे अखण्ड भारतं

मकुटे हिमोत्पर्वतं  च पादुकां द्रविड दिव्य  देशं
मध्ये विन्ध्य पर्वथं च प्रणतोस्मि भारत मातृकां

अभय वरद हस्थे खड्ग ध्वज धारिणीं
काषाय वर्ण शोबिते अम्ब वन्दे भारत मातृकां

कोटि सूर्य प्रकाशिनीं अम्ब नानाभरण भूषिथे
पद्म करे पधम मुखे देवी वन्दे भारत मातृके

साधु ऋषि मुनि पूजिते देवी सर्व विद्या स्वरूपिणी
ब्रह्म विध्या स्वरूपिण्यै वन्दे भरथ मातरं

வணக்கம் அன்னையே

அன்னை உன்னை போற்றுகின்றேன் இன்றும் என்றுமே
என்னை ஒரு ஆளாக்கிய  பெருக்கும் நீ

உயிரும் உடலும் உணர்வும் மொழியும் தந்து
வயிறும் நோக்கா வண்ணம் உந்தன் அன்புப்பால் ஊட்டி

மண்ணின் பெருமை காக்க எனக்கு வீர உணர்வுமே தந்திட்டு
கண்ணின் இமை போல் என்னைக் காத்த பாரத மாதாவே

என்ன சொல்வேன் உன்பெருமை இந்தப் பாரிலே
உன்னைப் போல ஒரு நானும் இல்லை உலகிலே

அன்பும் பண்பும்  அறமும் தந்து
ஆவி உடல் நரம்பில் நெஞ்சில் நின்று

என்னை உந்தன் அன்பினாலே என்றென்றும் ஆட்கொண்டு
உன்னை எந்த தாயாக உணர வாய்த்த பேரணங்கே!

தமிழும் நீயே வாடா மொழியும் நீயே படையெடுத்த
கயவர்கள் தலையைக் கொய்த வீராங்கனையே!

அம்மா உந்தன் பேரை சொல்ல ஊறுது வீரம் என்னுள்
சும்மா உன்னை நினைத்தாலே ஜென்மம் தன்னியம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
வல்ல தமிழும் வாழ்க குமாரி அன்னையும் தானே !

Thursday, July 27, 2017

பொய்யர்களின் மதம்

அதிசயங்கள் செய்து விட்டால் இறைவனாவானோ?
அதிசயங்கள் பலவும் செய்த  சித்தர்களுண்டு

சிலுவையதன் மீதேறி உயிரை விட்டானாம்
தன்னுயிர் தான் போகும் வரை என்ன செய்தானோ?

யூதனாக பிறந்தவன்  தான் சாமி ஆனானோ?
யூதர்களின் பனுவல்களைத் திருடும் மூடர்களே

இயேசு என்னும் மனிதன் வார்த்தை வேதமாகுமோ?
அவன் செத்தைம்பது  வருடங்கள் போன பின்புமே

பேய் பிடித்த மாக்களைப் போல் ஆடும் புலையர்கள்
பேயாட்டம் ஆடி தங்கள் மதத்தை மாற்றுவர்

இயேசு பிறக்கும் முன்பாக  பல நூற்றாண்டு
எங்கள்  நிலமும் வேதம் மதமதுவும் தானும் உண்டு

பேய் பிடித்த நாய்களே நீர் கேளீர் சொல்லுவேன்
காசு கொடுத்து மதத்தை மாற்றும் மானம் கெட்டவர்

யேசுவினை காசுக்காக விற்றுப் பிழைப்பவர்
பன்றி பசுவும் நாய்களுமே உங்களுக்குணவு

ஒழிக ஒழிக பொய்யர் கூட்டம் பொய் மதங்களும்
வாழ்க வாழ்க வேதங்களும் தமிழ் திருநாடும் !


ஆடி வெள்ளி ....

பச்சை மாவின் விளக்கினாலே படையல்கள் வைத்தோம்
இச்சை உடன் பச்சடியும் பாயசம் பருப்பும்

நீறு மோரும் பானகமும் அப்பம்  ்வடையும்
சோறு கறியும் வடையுடேனே  அப்பம் பாயசம்

தலை வாழை இலையினிலே உனக்கே படைத்தோம்
இலை பூக்கள் கொண்டு உன்னை பூசனை செய்தோம்

ஆசனாதி  அர்க்கிய பாத்திய  நைவேத்தியமும்
தூப தீப நமஸ்காரங்கள் உனக்கே அம்மா

அம்மை காய்ச்சல் குட்டரோகம் கை கால் குடைச்சல்
வாந்தி பேதி தலை சுற்றல் வயிற்று வலியுமே

நகச்சுற்று நரை மஜ்ஜை எலும்பு ரோகமும்
புற்று நோயும் காசமுமே முட்டியதன்  வீக்கங்களும்

உஷ்ண  வாயு சீத பேதி உள்ளிருக்கும் ரோகமெல்லாம்
நீரிழிவும்  இரத்தத்தின் கொதிப்பு நீக்கி எம்மை காரும்

குற்றம் குறை இருந்தாலும் பொறுத்து எம்மை காக்க வேண்டும்
சுற்றம் எல்லாம் சூழ வந்துன் பொற்பாதம் வணங்கி நின்றோம்

எங்கள் நாடு எங்கள் ஊரு எங்கள் வீடு சுற்றத்தையும்
எங்கள் சேனை ஆயுதங்கள்  அனைத்தையுமே காக்க வேண்டும்

எதிரிகளின் சேனைகளும் உள்ளே புகுந்திடாமலே
எதிரிகளின் ஏவுகணை  எங்களைத் தான் தாக்காமல்

எங்கள் மன்னர் மந்திரிகள்  எங்கள் நாட்டு பிரஜைகளும்
சூனியன்கள்  பில்லியுடன் சூழ்ச்சி ஏவல் மாயங்களும்

எங்களைத் தான் அணுகிடாமல் என்றென்றும் காக்க வேண்டும்
போரென்று வந்து விட்டால் வெற்றி அருள வேண்டுமம்மா

கொள்ளுமழை பேய  வேண்டும் உழவர் பயிர் சிறக்க வேண்டும்
நல்ல மழை பேய வேண்டும் நதி குளங்கள் நிறைய வேண்டும்

நகரங்கள் கோட்டைகள் நாடெல்லாம் இருக்க வேண்டும்
நிகரில்லாச் செல்வங்கள் எம்நாட்டில் நிறைய வேண்டும்

சாதி மத பேதமின்றி நாடெல்லாம் மகிழ வேண்டும்
ஆதியான அம்மாவே எமக்கருள வேண்டும் நீ

அருள் மாரி பொழிந்திடம்மா அடியோரைக் காத்திடம்மா
பொருள் இன்பம்  வீட்டுடன் அறம் தந்து காத்திடம்மா

பரசுராமன் தாயே நீ பாரத்தைக் காத்திடம்மா
தமிழ்நாட்டைக் காத்தது போல் தரணி எல்லாம் காத்திடம்மா

அம்மம்மா உன் பெருமை சொல்லாத தான் முடிந்திடுமோ?
குழந்தைகள் எங்களையும் என்றென்றும் காத்திடம்மா !

வேதம் பசுவும் பார்ப்பனரும் முதியோர் சிசுக்கள் பத்தினிகள்
தர்மிஷ்டர்  அனைவரையும் காத்தருள வேண்டுமம்மா !

Tuesday, July 25, 2017

பகுத்தறிவு பன்றிகள்

பன்றிக்கு பூணூல் போடும் பன்றி மக்களே  நீங்கள்
பன்றிக்குத்தான் ஞான ஸ்நானம் செய்து வெய்யுமேன்!

பன்றி உறுப்பை வெட்டி வேற்று மதத்தில் சேர்த்து
உங்கள் போராட்டம் செய்யுங்களேன் அதையும் பார்ப்போம் !

தொல்காப்பியன், அகத்தியனும், சம்பந்தன் கபிலன்
பார்ப்பனர்கள் தமிழ்த் தொண்டு அறிய மாட்டீரோ?

பகுத்தறிவு என்று சொல்லி பார்ப்பனரை வையும்
மானம் கேட்ட பன்றிகளே தெரிந்து கொள்ளுங்கள்!

பெரியார் தன்  கொள்கைகளை சொல்லும் பன்றிகள்
பகுத்தறிவும் சொல்லி நம்மை ஒழித்து விட்டார்கள் !

ப்ராம்மணரை துவேஷம் செய்தும் வேதங்களை நிந்தனை
நாத்தீகம்  என்று சொல்லி ஊரை ஏமாற்றும்

பன்றி நாயும் பாம்பும் தின்னும் அந்த புலையர்கள்
ஒழிக ஒழிக ஒழிக ஒழிக பெரியாரின் சீடர்கள்

மாமதுரை எரித்த நல்ல கண்ணகி தானும்
சம்பந்தரும் வாழ்ந்த நல்ல தமிழ்த்திருநாடு

பன்றி மேய்க்கும் பகுத்தறிவாளிகள் வேண்டாமே
இங்கு சமயம் கூறும் பெரியவர் தானும் வேண்டுமே

எம்மதமும் சம்மதம் தான் எங்களுக்கும் ஆனால்
என் மதத்தை பழிப்போரை சும்மா விடுவேனோ?

உயர்க உயர்க வேதங்களும் சன்மார்க்கமும்
வாழ்க பசு வாழ்க வேதம் அந்தணர்களும்!

வாழ்க தமிழ் வடமொழியும் செந்தமிழ்நாடும் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரத  நாடு!

Saturday, July 22, 2017

தமிழர்களின் உணவுமுறை


தமிழர்களின் உணவுமுறை தொன்மையானது
அது அறுசுவையில் சிறந்த மிக மென்மையானது

சோறும் புளிக்காய்ச்சலுடன் புளியோதரையாம்
மோரும் அரிசி மாவும் சேர்ந்தால் மோருக்களியாம்

பேரும் சொல்ல எச்சில் ஊரும் தேங்காய் சாதம்
ஏறும் பிடித்து உழுபவர்க்கு தயிருடன் சாதம்

ஊரும் சேர்ந்து வைத்திடுமே பொங்கல்  தன்னை
சேரும் எலுமிச்சை சாதம் மிகவும் அருமை

கீறும் மாங்காய் சேர்ந்ததொரு மாங்காய் சாதம்
நாறும் மணம் ஓங்கும் நல்ல எள்ளின் சாதம்

தாரும் தாரும் என்று உண்ணும் சாம்பார் சாதம்
போறும் என்று சொல்லாத தத்தியோதனம்

தேறும் உடலும் தின்றால் இதனை மல்லியின் சாதம்
கோரும் நன்மை தந்திடும் நெய்யொழுகும் சாதம்

அருமையான தமிழர் பெருமை சொல்லும் உணவும்
சைவமென்றே தெரிந்து கொள்வோம் எல்லாருமே

பிரியாணி என்று சொல்லும் நாற்றப் பொருளை
உகந்துண்ணும்  புலையர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

ரக்ஷா மந்திரம் - ஸ்ரீ ருத்திரம்

அழல்வண்ணன் பெருமானாம் முக்கண்ணன்
கழல் அடிகள் தொழுது நித்தம் ஏத்துவோமே!

வேள்வியினில் அவியதனைக் கொள்ளும் பெருமான்
கேள்வியினில் கல்வியினால் தெளியும் பெருமான்

தன் கண்ணால் மூவுலகம் சுட்டே எரிப்பான்
முன் மண்ணால் மாலவனும் காணாப் பெருமான்

அழித்தலுக்குக் கடவுள் அவனே உருத்திரன் என்பர்
விழித்தல் வேண்டாம் சிவனே எங்கள் படைகள் மீது !

தவம் செய்யும் ரிஷி முனிவர் புண்ணியர்களையும்
கோபம் கொண்டுன் முக்கண்ணால் பார்த்திடல் வேண்டாம்

எங்கள் நாட்டு குடிமக்கள் அரசர்களையும் மற்றும்
குதிரைப் படை காலாட்படை சேனைகளையும்

உந்தன் கோபக் கண்ணால் பார்க்காதே நீயும் தானே
எந்தன் சிரம் தாழ்த்திய வணக்கம் உனக்கு சிவ பெருமானே

பாரதத்தின் புதல்வர்கள் யாவர்களையும்
சேவகர்கள் தங்களையும் காத்திடல் வேண்டும்

பசு மாடுகள் கன்றுகளும் காளைகளையும் மேலும்
குதிரை யானை படைகளையும் காத்திடல் வேண்டும்

கோபக் கண்ணால் எல்லோரையும்  பார்த்திட வேண்டாம்
கோபம் தணிந்து குளுமையாகக் காக்க வேண்டுமே

உருத்திரனே பசுபதியே எங்கள் விண்ணப்பத்தை
க்ருத்துடனே ஏற்று எம்மைக் காக்க வேண்டுமே

அவிர்பாகம் தனைக் கொள்ளும் பரமேசுவரா
தவிர்க்காமல் வணங்கி நின்றேன் எம்மைக் காரும்

போரதுவும் வாராமல் எம்மைக் காருமே
போரதனில் வெல்ல உம்மருளைத் தாருமே

சிவ சிவ சிவ சிவ நீலகண்டனே!
பவ பவ பவ பவ  பரமேசுவரா !

Monday, July 17, 2017

தொல்காப்பியரும் அவர் தம் ஐந்து தலைமுறைகளும்


திருமகள் தன் தந்தை நம் பார்கவ முனிவன்
அவன் திருப்பாதம் போற்றிடுவோம் நாம் அனைவரும்

ஸ்யவனன் முனிவானமே பார்கவர் புதல்வன்
அவன் திருவடிகள் சிரசில் வைத்துத் தொழுதிடுவோமே!

ஆப்னவானன்   மஹரிஷியாம்  ஸ்யாவனர் மகன்
அவர் திருவடியின் நிழல் தன்னிலே வாழந்திடுவோமே!

அவுருவன் தன் திருப்பாதம் போற்றிடுவோமே
அவன் ஆப்னவானன்  திருமகனாம் அறிந்து கொள்வோமே

ஜமதக்கினி முனிவர் பெருமை பாடிப் பரவுவோம்
அவுருவன்  தன்  புத்திரனாம் அறிந்து கொள்வோமே

இரேணுகாம்பை  ஜமதக்கினி தன் மனைவியாம்
மாரியம்மன் என்று அவளைத் தெரிந்து  கொள்வோமேன்!

பரசுராமன் அவன் பெருமை நாடும் அறியுமே
அவன் மழு எரிந்து தமிழகத்தை  தந்த முனிவனாம்  (அகநானூறு)

ஜமதக்கினி முனிவர் பெற்ற தவப் புதல்வனாம் அவன்
கையில் மழுவும் கொண்டதனால் பரசுராமனாம்

பரசுராமன் தம்பி ஆகும் புண்ணியன் பெயர் தான்
திருணதூமாக்கினி என்று சொல்லும் இலக்கியம் (தொல்காப்பியம்)

அகத்தியனார் செய்த ஆதி இலக்கண நூல்கள்
ஐந்திரமாம் வியாகரணம் வேத சாத்திரம்

நான்கு வேதம் கற்றுணர்ந்த புண்ணியனாம் நம்
தொல்காப்பியன் என்று சொல்லும் திருணதூமாக்கினி

இடை சங்கம் தந்திட்ட நம்  தொல்காப்பியனை
ஊனும் உயிரும் உள்ளவரை என்றும் மறவோமே!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த முனிவர்கள் பெருமை
நம் தமிழ் வளர்த்த முனிவர்களின் பெருமை பாடுவோம்.

திருமகள் பெருமை

திருப்பாற்கடல் தன் மகளாம் பார்க்கவன் புதல்வி
கருநீல மேனி மாலைக்  கைப் பிடித்தாளே

வெள்ளி தங்கம் போல வண்ணம் கொண்ட திருமகள்
சுள்ளி விலுவ மரத்தினாலே வேள்வியும்  கொள்வாள்

பெண்கள் நெற்றி வீட்டின் நிலவில்  நித்தியம்  இருப்பாள்
கண்கள் இமையும் போல மாலும் அவளும் இருப்பார்

பெற்ற தாயைப் போல பக்தர் துயரம் துடைப்பாள்
கற்ற சேய்கள் தம்முடைய வினைகள் அறுப்பாள்

திருமாலின் திருமார்பில் நித்தியம்  உறையும்
திருமங்கை திருப்பாதம் போற்றி போற்றியே !

Sunday, July 16, 2017

பாரதத்தாய் வாழ்த்து

வேதம் சொல்லும் உண்மை தன்னைத் தெரிந்து கொள்வோமா?
பேதம் இன்றி அறமதனைப் புரிந்து கொள்வோமே

பரம் பொருள் தான் உலகத்திற்கே மூலம் என்றுமே
அறம் பொருளுடன் இன்பம் வீடு சொல்லும் வேதங்கள்

பரம் பொருளினை மறைத்துக் காட்டும் திருமறை நூல்கள்
அறம் பொருளினைச் சொல்லி வீடும் தருமறை நூல்கள்

படை  எடுத்த கயவர் நூல்கள் மறையும் ஆகுமோ ?
சடை பெருத்த பரமன் அன்றி இறைவன் வேறுண்டோ ?

பஞ்சு விற்க வந்த வெள்ளை வஞ்சகர் தாமும்
அஞ்சி நிற்க போர் புரிந்த பாரத  நாடு

பரியில் ஏறி படை எடுத்த துருக்க சேனையின்
கரியைப் பூசி  முகத்தில் வென்ற இந்திய நாடு

கயவர் நூல்கள் மறையதுவாய் ஆகிவிடாது
பகைவர் நெறிகள் நம்மவரின் மதமும் ஆகாது

பாரதத் தாய் பெற்ற மக்கள் அனைவரும் ஒன்றே
சாரதாம்பா தந்த மொழிகள் எல்லாம் ஒன்றுமே

இமயம் முதல் குமரி வரை ஒரே மதமும் தான்
சமயம் அது வேறானாலும் மரபு ஒன்றே தான்

வாழ்க வேதம் உபநிடதம் சாத்திரங்களும்
வாழ்க பேதம் இன்றி மக்கள் அனைவருமே தான்

வீழ்க பேதம் சொல்லித் திரியும் வஞ்சகர் தாமும்
வீழ்க மதமும் மொழியும் சொல்லி கூச்சல் செய்வோரும்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
வேத புராணங்களும் அவள் கண்கள் ஆகுமே

அறம் பொருளும் இன்பம் வீடும் நான்கு லக்ஷியம்
சொல்லித் தந்த முனிவர்கள் தாம் அவள் தன மைந்தரே

ரிஷிகள் சொன்ன வாக்கை அழிக்க வந்த கயவர்கள்
மதத்தை மாற்றி மோசம்  செய்யும் பொய்யர் வீழ்கவே

பாரதத் தாய் பெற்ற மக்கள் எல்லோரும் வாழ்க
அவள் சொல்லித் தந்த நெறியில் வாழும் மக்களும் வாழ்க

அன்னை தன்னைப் போற்றும் உயர் மரபும் வாழ்க
வாழ்க வேதம் அந்தணர்கள் பசுவும் வாழ்க

வாழ்க ரிஷிகள் முனிகள் வாழ்க வாழ்க வேதங்கள்
வீழ்க பொய்யர் நாத்தீகர்கள் வஞ்சகர் வீழ்க

Saturday, July 15, 2017

செந்தமிழ்நாடும் அதன் பெருமையும்

மதத்தை மாற்றிக் கொள்ளும் மூடர்களே கேளுங்கள்
மதத்தை மாற்றிக் கொண்டால் உங்கள் மரபு மாறுமோ ?

மரபதுவும் மாறி விட்டால் தானும் போதுமோ?
மரபணுவை மாற்றிக்கொள்ள தானும் முடியுமோ?

சிவா பெருமான் முருகன் தந்த தங்க தமிழினை
தாரை வார்க்க உங்களுக்கு உண்டோ அருகதை?

சங்கம் நாட்டித் தமிழ் வளர்த்த எங்கள் மதுரையாம்
பங்கம் இன்றித் தமிழில் நூலை தந்த முனிவனாம்

குடந்தை மாநகரம் தானே  கோயில்கள்  நகரம்
மடந்தை பெண்கள் நிறைந்த எங்கள் சேர நாடுமே

மீனும் முத்தும் நிறைந்த எங்கள் பாண்டிய நாடு
மானும் சோறும் விளையும் நல்ல சோழநாடுமே

மலைகள் யானை நிறைந்த எங்கள் சேர நாடும் தான்
கலைகள் பலவும் வளரும் நல்ல பல்லவ நாடு

வேதம் தருமம் விளைந்த எங்கள் தென் தமிழ்நாடு
பேதம் இன்றி அனைவரும் தான் வாழும் தமிழ்நாடு

வேங்கடமாம் வடக்கில் எல்லை தமிழின் நாட்டிற்க்கே
குமரிமுனை தெற்கில் கொண்ட தென் தமிழ் நாடு

வட வேங்கடமுடையான் அருள் வடக்கில் இருக்குமே
தென் குமாரி அன்னை அருள் தெற்கில் இருக்குமே

திரு நாகைக் காரோணம் இருக்கும் கிழக்கிலே
பெருங்காவின் பகவதியும் இருப்பாள்  மேற்கிலே

எங்கள் தெய்வம் வாழும் ஊரில் வேற்று மரபினர்
தங்களுடைய பொய்க்கதைகள் சொல்வர் நித்தமும்

வாழ்க வாழ்க எங்களுடைய செந்தமிழ்நாடு
வாழ்க வாழ்க நாங்கள் வாழும் பாரத நாடு

வீழ்க வீழ்க வந்தேறிகள் பொய்யர் கூட்டங்கள்
வீழ்க வீழ்க நயவஞ்சகர் தங்கள் கூட்டமும்

Friday, July 14, 2017

தமிழும் ஆரியமும்..

வஞ்சகனாம் வெள்ளைக்காரன் சொன்ன கதைகளை
நெஞ்சத்தில் கொண்டு பொய்யாய் பேசுகின்ற மாந்தர்கள்

ஆரியமும் திராவிடமும்  பேசி காலம் கழிப்பரே!
காரியமும் செய்யாமல் காலம் கழிக்கும் வீணர்கள்

சாதி பேதம் சமய பேதம் மொழியில் பேதம் பேசியும்
ஆதி பொருளின் பிள்ளைகளே அனைவரும் ஆவர்

ஒரே குலம் ஒரே தேவன் மொழியும் ஒன்றே
ஒரே இனம் மனித இனம் என்பதை மறந்து

மொழியில் பேதம் சொல்லி சொல்லி நம்மைப் பிரித்தும்
புவியில் வாழும் பாவிகளை ஒலித்தால் வேண்டும்

வேதம் தரும சாத்திரங்கள் உள்ள ஆரியம்
பேதம் இன்றி எல்லோரும் பேசும் தமிழும்

ஆதியான சிவபிரானின் படைப்புகள் தாமே
சோதியான கடவுள் தந்த மொழிகள்  இரண்டும்

உள்நாட்டில் உன்னதமாய் உள்ள மொழிகளே
வெளிநாட்டில் இருந்து வந்த மொழி ஆங்கிலமே

ஆங்கிலத்தை கற்கும் மூடர் பெருமை கொண்டும்
ஏனையோரை பரிகாசித்தால் மாற வேண்டுமே

துருக்க நாடு மொழியாம் அரபி பாரசீகமும்
சிறக்க பேசும் மூடர்களை என்ன சொல்லுவேன்?

மென்மையான தமிழ் மொழியின் சிறப்பு பெரியது
தொன்மையான தாய் மொழி தான் காத்துக்கினியது

பீஜ மந்திரம் கொடுத்த மொழியும் பெரியது
வேத மந்திரம் அளித்த மொழியும்  பெரியது

தாய்மொழியாம் தமிழ் மொழிதான் வாழ்க வாழ்கவே!
தாய் நாட்டின் ஆரியமும் வாழ்க வாழ்கவே!

படை எடுத்து  வந்த கயவன் தந்த மொழியது
படை கெடுத்த துருக்கர் மொழி வீழ்க வீழ்கவே!

பஞ்சு விற்க வந்த வெள்ளை பிச்சைக்காரன்
நெஞ்சு தானில் கருமை கொண்ட நயவஞ்சகர்

ஆங்கிலத்தில் பேசி பேசி தமிழை ஒழித்த
ஆங்கிலமாம் அந்நியரின் பாஷை அதுவுமே
 வீழ்க வீழ்கவே

நாத்தீகம்  பேசி நயவஞ்சமாய் (தமிழ்) இனத்தைப் பிரித்த
கயவர்கள் தம் சூழ்ச்சிகளும் வீழ்க வீழ்கவே !





தமிழ் வளர்த்த புண்ணியர்

முக்கண்ணன் பெருமானாம் கடவுள் தமிழுக்கே
தீவண்ணன் தானும் நின்றான் தமிழ் சங்கத்தில்

அழகின் பெயரே முருகன் அந்த அழகன் தானும்
பழகி நின்று முதல் சங்கம் தானும் அமர்ந்தான்

குறுமுனி அவன் வந்தானே தென்புலம் காக்க
பெருமுனியும் தந்தானே அகத்தியம் எனும் நூல்!

தமிழ்ப்புலவன் நக்கீரன் புகழும் பெரியதே
தமிழ் வளர்த்த சங்கம் தன்னில் ஆனான் அங்கமே !

தொன்மையான காப்பியத்தை இயற்றி இலக்கணம்
மென்மையான தமிழில் சொன்னான் தொல்காப்பியமே

வட மொழியும் தமிழும் சேர்த்து செய்யும் செய்யுளாம்
வடமொழி சொல் சேர்த்தால் தமிழில் தப்பும் இல்லையே

என்று சொன்னான் தொல்காப்பியன் வேத வித்தகன்
ஐந்திரமாம் வியாகரணம் கற்ற வித்தகன் (திருணதூமாக்கினி))

இரேணுகாம்பா ஜமாத்திக்கினி தந்த நல்மகன்
பரசுராமன் தம்பி தந்த தொல்காப்பியமும்

தமிழ் வளர்த்த மாமுனிவர் எல்லோரும் வாழ்கவே!
தமிழ் வளர்த்த புலவர்களாம் புனிதர்களும்வாழ்கவே !

வாழ்க வாழ்க சிவனும் குகனும் வாழ்க கும்ப முனியும்!
வாழ்க பரசுராமன் அவன் தன் அருமை தம்பியும்!

வாழ்க சங்க தமிழும்! வாழ்க சங்க புலவர் எல்லோரும்!
தமிழைத் தாய் மொழியாய்க் கொண்ட புண்ணியர் வாழியே!

கள்ளின் கொடுமை

கள்ளருந்தும் கயவர்களை என்னவென்று சொல்லுவேன்
கள்ளருந்தி கண்ணை மூடி காணும் இடத்தில கிடந்துமே

மனமழிந்து மதியும்கெட்டு மண்ணைக் கவ்வும் மடையர்கள்
மதியிழந்து மானம்கெட்டு தன்னை மறக்கும்  கடையோர்கள்

மதுவும்  களவும் கொலையும்  ஹிம்சை
மாதும் இவைகள் ஐம்பெரும் பாதகங்கள் ஆகுமே

மதுவை அருந்தி மதியும் இழந்த மாந்தர் பின்பு
மாது முதல் மற்ற மூன்று பாவங்கள் செய்வர் எளிதில்

உலகில் உள்ள பாவங்கள் அனைத்திற்கும் மூலம்
உலகில் உள்ள ரோகங்கள் எல்லாமே மதுவினாலே

மதுவை உண்டவர்க்கு உண்டாம் நரகத்தில் வாசம்
மதுவின் சொட்டுக்கொரு ஆண்டு என்று கணக்கில்

உண்ணற்க உண்ணற்க உண்ணற்க மதுவை
செய்யற்க செய்யற்க செய்யற்க  பானம்

Thursday, July 13, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - வேத சிறப்பு

வேத சிறப்பு 

உருவம் இல்லாத அந்தப் பரம்பொருள்
அருவம் உருவம் ஆன பரப்பிரம்மம்

வேதமே அந்தப் பிரம்மத்தின் சுவாசம்
வேதமே படைப்பிற்கு ஆதாரம்

வேதமே உலகின் முழுமுதல் கிரந்தம்
வேதமே மானிடருக்கு என்றும் வழிகாட்டி

வேதமே பாரதத்தின் கலாச்சாரம்
வேதமே நான்காகி ஓதப் பெரும் பரம பவித்திரம்

வேதத்தை என்றும் நாம் காக்க வேண்டும்
வேதத்தை என்றும் நாம் வளர்க்க வேண்டும்

புருட சூக்தம் 

ஆயிரம் தலைகள் கொண்ட அந்த புருடன்
ஆயிரம் கண்கள் கால்களும் ஆயிரமே

பூவுலகம் எங்கும் நிறைந்தவன் புருடன்
அதற்கும் அங்குலங்கள் பத்து அதிகமானவன் புருடன்

Wednesday, July 12, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - இராமன் பெருமை

திருமாலின் அவதாரம் ஆன நம் இராமனும் !
இலக்குவன் தான் ஆதிசேடன் தன்னுடைய பிறவியே !

ஆழி சங்கும் பிறந்தனர் பரத சத்துருக்கனராய்!
பூவுலக வைகுந்தம் ஆனதே  அயோத்தியா !

இலக்குமியாம் சீதையும்  தான்  பூவுலகம் வந்தனள்!
வானரமாய் வந்தனர் தேவரக்கூட்டம் எல்லோரும்!

ஐயனும் வந்தான் இராவணனாய்!
விஜயனும் தான் கும்பகருணன்!

சீதை தன்னை கவர்ந்து சென்ற இராவணன் தன் கருவத்தை
அடக்கியவன் சிரமருத்து இலங்கை வென்று கொண்டுமே

குமபர்ணன்  தன்னுடைய சிரத்தையும் தான் வென்று நின்று
இராமனிடத்தில் சரணடைந்த வீடணற்கு முடி தரித்து

பரமசிவன் உருவமான அனுமனுக்கு அபயம் தந்து
தம்பிகளும், வானரமும் சீதையுடன் கூடவே

இலங்கை விட்டாயோத்தி சென்று உலகமெலாம் புகழவே
முடி தரித்து உலகமாண்ட இராமன் புகழ் பாடுவோம் !

ராம ராம ராம ராம ராம நாமம் வாழ்கவே!
கலியுகத்தில் நம்மைக் காக்க வேறெவரும்  இல்லையே!

Monday, July 10, 2017

ஸ்ரீமணியின் கவிதைகள் - மாண்டூக்ய உபநிடத சாரம்

ஓம் என்ற ஓரெழுத்து அதுவே தான் பிரம்மமே !
அகார உகார மகாரம்  ஓம்காரம் ஆகுமே !

அம்மூன்று  எழுத்துக்களையும் தாண்டி நிற்கும் அமைதி நிலைமை!
அதுவே தான் ஆகுமே தனிப் பிரமம்!

விழித்திருக்கும் நிலைமை அது அகரம் ஆகுமே!
அதுவே முதல் பாகம் அந்த  ஓம்காரத்தில்!

சொப்பன நிலை அது இரண்டாம் பாகம்
உகரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

ஆழ்ந்த உறக்கம் தான் மூன்றாம் நிலைமை
மகாரம் அது ஆகுமே அந்த ஓம்காரத்தில்!

விழிப்பு  சொப்பனம் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இந்த
மூன்று நிலைகளுக்கும் சாட்சியாய் நிற்கும் அந்த நாலாம் பாகம்!

அந்த நாலாம் பக்கமே பிரம்மமும் ஆகிடும்!
அகார உகார மகாராதிகட்கு அப்பலாய் நிற்கும்
சப்தமும் அதுவே ஓம்காரத்தில்!