1008 காய்கறிகள் சாப்பிட ஆசையா? இதோ பாருங்கள்....
திவசத்தில் விஸ்வாமித்ரர் 1008 காய்கள் வேண்டுமென்று கேட்க, வசிஷ்டர் மனைவி அருந்தத்தி கீழ் வருமாறு செய்தாள்.
காரவல்லி ஶதம் சைவ வஜ்ரவல்லி ஶதத்ரயம்
பனஸம் ஷட் ஶதம்சைவ ஶ்ரார்த்தகாலே விதீயதே
कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते
பாகல் - 100 , பிரண்டை - 300, பலாப்பழம் - 600 , ஆக 1000 கைகள். - இவைகளை ஸ்ரார்த்த காலத்தில் அவசியம் செய்ய வேண்டும் என்னும் ஸ்லோகம்.
பிரண்டை, பாகற்காய், பலாக்காய்/ பலாப்பழம் - இந்த மூன்றுமே 1000 காய்களுக்கு சமானம். அதன் மேல் எட்டு கரி/ கூட்டு,பச்சடி வகைகளை செய்ய, ஆயிரத்து எட்டு காய்களின் கணக்கு வந்து விட்டது என்றாளாம். எனவே ஸ்ராத்தத்தில் பிரண்டை, பாகற்காய், பலாப்பழம் அவசியம் சேர்க்க வேடனும் என்பது நம் மரபு.
இப்படி தமிழர்களின் தொன்மையான உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் காப்பது நாம் தான் என்று பெருமை கொள்ள வேண்டும்.
சேம்பு, காவத்து,சேனை, சர்க்கரைவள்ளிகிழங்கு, கொற்றவரை , அவரை, பாகல், மாம்பழம்/காய், பலாப் பழம் / காய், விளாம் பழம், இலந்தைப் பழம், இஞ்சி, குறுமிளகு, வாழைக்காய்/பழம், புடலை, வெள்ளை பூசணி , பிரண்டை, அரைக்கீரை, அகத்தி கீரை - இவைகளே சத்துவ குண காய் கறிகள். இவைகளே சாஸ்திரத்தால் அங்கீகரிக்க பட்ட காய் கறிகள். (வெண்டை, கத்திரி பரவாயில்லை , ஆனால் முருங்கை,பீர்க்கு, சுரை - தவிர்க்க வேண்டும் என்று உள்ளது புராணங்களில்). சின்ன வெங்காயம், மலை வெங்காயம், வெள்ளைப் பூண்டு , காளான் - இவை உண்ணவே கூடாது என்று தர்மம் சாஸ்திரத்தில் உள்ளது. காளான், பிணத்தின் மீதும் கூட முளைத்து விடும். அது தாவரத்துக்கும், மிருகத்துக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம்.
தக்காளி, வெங்காயம், பூண்டு,மிலேச்ச காய்கறிகள் அனைத்துமே பிற்காலத்தில் சேர்க்கப் பெற்றவை. இன்றைக்கு தமிழர்களின் இழிநிலை என்னவென்றால் - நம் பாரம்பரியம் எது என்றே தெரியாமல் , அந்த மோதிரச்ட்டை கிழவன் சொன்ன பொய் கதைகளை நம்பி கொண்டு அலைகின்றோம்.
No comments:
Post a Comment