ஜலாலுதீன் ரூமி என்பவர் பாரசீக(சூஃபி) கவி. "அந்த சூரியன் என்னுள்ளேயே இருக்கும் பொழுது காலத்துக்கு என்ன வேலை" என்கிறார். ஆத்மாவாகிய சூரியனை உணர்ந்தவன், கால தேச வர்த்தமானங்களுக்கு அப்பலாகி நிஜ பாதத்தில் நிலை பெறுகின்றான் எனபதே அந்த கவிதையின் அந்தாரார்த்தம். வேதத்தின் மஹாவாக்யங்களை பூர்ணமாக உணர்ந்த, அனுபூதியில் பெற்ற புண்ணியர்களுக்கு மதம், சாதி, இதெல்லாம் இல்லவே இல்லை.
உபநிஷத்துக்களின் சத்தியத்தை உணர்ந்த மஹநீயர் அவர். அதுவே நம் உபநிஷதங்கள் மஹிமை - எந்த தேசத்தில், எந்த மதஸ்தர், மொழியினர் ஆன்ம ஞானத்தை உணர்ந்தாலும் அவர்கள் வாக்கு சுருதி சம்மதவாகவே இருக்கும். கோடி யுகங்கள் ஆனாலும் அழியாத சத்தியம் இது. இதுவே நம் வேத உபநிஷதங்கள் சத்தியம்.
No comments:
Post a Comment