பூரணமான ஆத்ம ஞானம் இல்லாமல், இந்த உலகத்தை விட்டு செல்லும் அஞ்ஞானிகள், தாங்கள் உபாசிக்கும் அந்தந்த தேவதைகளின் உலகத்தை சென்று அடைகின்றார்கள். பூர்ண ஞானம் பெற்றவர்கள் மட்டுமே ஸ்வயம் பிரகாசமான அந்த பிரும்மத்தில் இரண்டற கலைக்கின்றனர்.
இன்னும் ஒரு அற்புதமான ஒரு ஸ்லோகம் சாந்தோக்கிய உபநிஷத்தில் - இங்கு சிதாகாசத்தை பற்றி சொல்ல படுகின்றது. எனேவே தான் சிதம்பரம் ஆகாச க்ஷேத்திரம் என்பார்கள். சிதாகாசத்தில், இருக்கும் ஆத்ம ஸ்வரூபமே நடராஜர். உபநிஷத்தில் கூறும் அந்த பிரும்ம ஸ்வரூபம் அவரே.
No comments:
Post a Comment