துவாதசி பாரணையின் மஹிமைகளும் ஆரோக்கியமும்
முதல் நாள் ஏகாதசி அன்று பட்டினி இருந்து காய்ந்த வயிற்றுடன், அதிகாலையில் எழுந்து சுண்டைக்காய்,அகத்திக்கீரை, நெல்லிக்காய் உண்பதே பாரணை எனப்படும். அகத்திக்கீரையில் பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் அதிகம். அதே போல சுண்டைக்காய் வயிற்றில் உள்ள தீய நுண்ணுயிரிகளை அகற்றும். நெல்லிக்காய் இரும்பு சத்து நிறைந்தது. பட்டினி இருந்தமையால், புளிப்பு காரம் இல்லாமல் தயிறு, மிளகு சேர்த்து உண்ண உடலில் அமிலத்தன்மை சீர் படுகின்றது. அதே போல தயிர் (நெல்லிக்காய் பச்சடி) உண்பதால் உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை மீண்டும் செலுத்துகின்றோம். இப்படி ஒரு வைட்டமின் சத்துக்கள் கொண்ட அற்புதமான விஷயம் துவாதசி போஜனம். விடியற் காலையில் வெறும் வயிற்றில் இதனை உண்பதால் உடலுக்கு மிக்க ஆரோக்கியம். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் கூட நன்றாக குறைந்து கிடைக்கும். நாம ஜபத்தால் மனம் சீர் பெரும், துவாதசி போஜனத்தால் உடலும் சீர் பெரும் - இப்படி நம் முன்னோர்கள் தந்த ஒரு அருமையான வாழ்க்கை முறையை எல்லோரும் பின்பற்றி பயனடைய வேண்டும் என்று அந்த கண்ணனை வேண்டி கொள்கின்றேன். ஹரே கிருஷ்ண
No comments:
Post a Comment