Sunday, April 1, 2018

காயத்ரி மந்திரத்தின் பெருமைகள்.....

ஸுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு மிக பெரிய உபநிஷதம் ப்ருஹதாரண்யக உபநிஷதம். இந்த உபநிஷத்தில் தான் "ப்ரம்மஹைர் வா காம் அஸ்மி" என்ற மகா வாக்கியம் அமைந்துள்ளது. இந்த உபநிஷதம் , காயத்ரி மந்திரத்தை பற்றி சொல்லும் அதிசயமான விஷயங்களை அனுபவிப்போம் வாருங்கள்.
காயத்ரி - என்றால் 24 அக்ஷரங்களை கொண்ட செய்யுள் வடிவம் என்று பொருள். சூரியனை மையமாக கொண்டதால் இதனை சாவித்ரி என்றும் சொல்லுவார். உபநயன காலத்தில் ப்ரம்மோபதேச சமயத்தில் அதி ரஹஸ்யமாக உபதேசிக்கப்பெறும் இந்த மகா மந்திரத்தின் பெருமைகளை காண்போம் வாருங்கள்.
௧. காயத்ரியின் முதல் எட்டு எழுத்துக்கள் பூமி, அந்தரிக்ஷம், சுவர்க்கம் - ஆகியவற்றால் ஆனது. எனவே இந்த மூன்று உலகங்களும் காயத்ரியின் முதல் பாதம் ஆனது. இந்த மூன்று உலகங்களின் பெயர்களிலும் எட்டு அகஷ்ரங்கள் உள்ளதால், இது காயத்ரியின் வரேண்யம் வரையிலும் உள்ள முதல் எட்டு எழுத்துக்கள் ஆகின. எவென் ஒருவன் காயத்ரியின் முதல் பாதம் , மூன்று உலகங்கள் என்று அறிகின்றானோ அவன், இந்த மூன்று உலகங்களில் உள்ள அனைத்தையும் வெல்கின்றான்.
௨. ருக்கு, யஜூஸ்ஸு, சாமம் ஆகிய மூன்று வேதம்களும் காயத்ரியின் அடுத்த எட்டு எழுத்துக்கள் ஆகின. எனவே இந்த மூன்று வேதங்களும் காயத்ரியின் இரண்டாம் பாதம் ஆகின. எவன் ஒருவன் காயத்ரி மகா மந்திரத்தின் இரண்டாவது பாதத்தை , இப்படி மூன்று வேதங்களின் சாரமாக அறிகின்றானோ அவன் அந்த மூன்று வேதங்களில் உள்ள அனைத்து வித்தைகளையும் (அறிவையும்) அறிந்தவன் ஆவான்.
௩. பிராணன், வியானன், அபானன் - என்று சொல்லப்பெறும் மூன்று வாயுக்களும் காயத்ரியின் மூன்றாவது பாதம் (எட்டு எழுத்துக்கள்) ஆகின. எவன் ஒருவன் இப்படி இந்த மூன்று வாயுக்களும் , காயத்ரியின் மூன்றாவது பாதம் ஆகியது என்று அறிகின்றானோ அவன் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வென்றவன் ஆவான்.
௪. இனி இந்த மூன்று பாதாம்களுக்கும் மேலான நான்காவது பாதம் - அதுவே கீழாக உள்ள வஸ்துக்களுக்கு மேலாகி பிரகாசிக்கும் அந்த சூரியன். அதாவது நாம் காணப்படும் இந்த வஸ்துக்களுக்கு மேலாகவும், அப்பாற்பட்டு பிரகாசிக்கின்ற அந்த சூரியனாகவே உள்ளது காயத்ரியின் நான்காவது பாதம். எவன் ஒருவன் இப்படி காயத்ரியின் நான்காவது பாதத்தை
சூரியனாக அறிகின்றானோ அவன் அப்படிப்பட்ட யஷஸ்(பெருமை), ஸ்ரீ ( செல்வம் / நற்குணங்கள்) உடையவனாக ஒளிர்கின்றான்.
௪. அந்த காயத்ரி ஆனவள் நான்காவது பாதத்தில் தான் நிற்கின்றாள். (உலகத்திற்கு அப்பாற்பட்டது) . அந்த நான்காவது பாதம் ஆகிய (சூரியன்) சத்தியத்தின் மீது நிற்கின்றது. இந்த (அக) கண்ணே உண்மையானது. கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்பதால் கண்ணே சத்தியமானது. எனவே தான் இருவர் சண்டை இடும் பொழுது "நான் கேட்டேன்", "நான் பார்த்தேன்" என்று இருவர் சொன்னாலும் கண்ணால் கண்டவர்க்கே முக்கியத்துவம். அந்த சத்தியம் ஆனது பலத்தின் மீது உள்ளது - அந்த பலமானது பிராணன் மீது உள்ளது. எனவே அந்த சத்தியமானது பிராணனின் மீது நிற்கின்றது (ப்ரதிஷ்டித்து). எனவே அந்த காயத்ரி அத்யாத்மம் (ஆத்மா) என்ற தன்னுள் உள்ள பிராணனின் மீது நிற்கின்றாள்.கயா என்ற பிராணனை காப்பாற்றியதனால் காயத்ரி என்று பெயர். எந்த சாவித்ரியை குருவானவர் தம்முடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பாரோ அதுவே காயத்ரி எனப்படும்.
௬.மூவுலகங்களையும் ஏற்பதினால் காயத்ரியின் முதல் பாதத்தின் அறிவால் வரும் பலனையே ஒருவன் அடைகின்றான். அதே போல மூன்று வேதங்களில் உள்ள எல்லா வித்தைகளையும் அறியும் ஒருவன் காயத்ரியின் இரண்டாவது பாதத்தை அறிவதனால் அடையும் பலன்களையே அடைகின்றான். எவன் ஒருவன் அனைத்து பிராணிகளையும் ஏற்கின்றானோ, அவன் காயத்ரியின் மூன்றாவது பாதத்தை அறிவதனால் அடையும் பலனையே அடைகின்றான். ஆனால் அந்த கயாத்திரியின் நான்காவது பாதமாகிய , உலகிற்கு அப்பாற்பட்ட அந்த (ஆத்ம) ஒளிர்கின்ற சூரியனை அறிதல் எந்தது - எதற்குமே ஈடு கட்ட முடியாத ஒன்று. எத்துணை வஸ்துக்களை தான் ஒருவர் ஏற்க முடியும்? !!!!
சங்கரபாஷ்யம்: இப்படி காயத்ரியின் மூன்று பாதங்களை அறிவதால் கிடைக்கும் எந்த பலன்களையும் ஒருவன் ஏற்க முடியாது. மூன்று உலகங்களை ஒருவன் ஏற்க முடியுமா? இல்லை. எனவே இந்த காயத்ரியை அதன் பூர்ண வடிவமாகி தியானித்தால் வேண்டும். முதலில் கூறப்பட்ட (மூன்று பாதங்களின்) உவமைகளும் கூட அடைய இயாலாதவைகள் தாம்.
காயத்ரியின் வந்தனம்: ஒரு பாதம் உடையவளே, இரு பாதம் உடையவளே, முப்பதாம் உடையவளே, நான்கு பாதங்கள் உடையவளே, பாதங்கள் அற்றவளே! இந்த உலகற்றிக்கு அப்பாற்பட்டு ஒளித்தூரம் ஊறியனாகிய நான்காவது பதிவு உடையவளே உனக்கு வணக்கம்!
காயத்ரி மந்திரத்தை அறிந்தவன், எவர் மீதேனும் பகை இருக்குமாயின், "என் எதிரியின் இஷ்ட வாஸ்து சிந்திக்காமல் போகட்டும்" என்று காயத்ரி ஜபித்தால் எதிரிக்கு அபஜெயம் உண்டாகும். அதே போல தான் எதிரியின் இஷ்ட வாஸ்து தனக்கு சிந்திக்கட்டும் என்று ஜபிக்க , எதிரியின் காம்ய (பிரிய) வாஸ்து ஜெபிப்பவரை வந்து அடையும்.
காயத்ரியை உபாசிப்பதால் ஒருவன் அந்த ஆதம் ஸ்வரரோபதை, சூரியனைப் போல தான் அக கண்களால் கண்டு ஜவான் முக்தனாக ஆகின்றான் என்பதே இந்த உபநிஷத் வாக்கியங்களின் உட்பொருள் என்பது என்னுடைய கருத்து.

















Show more reaction

No comments:

Post a Comment