Sunday, April 8, 2018

ஆதிசங்கரர் அனுபவித்த திருவரங்கன்................



திருவராங்கனை கண்டா ஆழ்வார்கள், பக்தி பரவசத்தில் பலவாறாக அவனை பாடினார். அதே போல தான் நம் ஆதி சங்கரரும் செய்தார். உபநிஷத்துக்களை எல்லாம் கரைத்து குடித்த ஆச்சார்யாள், பரம ஆஸ்தீகர். அவர் காலம் கழிந்து 1500 ஆடுகளுக்கு பின் வேற்று சித்தாந்தங்கள் உருவாயின.

நிர்பேதமான பக்தியையும், சைவ வைஷ்ணவ  ஒருமைப்பாட்டையும் போதித்தார் ஆச்சார்யாள். உபநிஷத்துக்கள் மார்கத்தை பிசகாமல் போதித்த நம் பகவத்பாதாள், திருவராங்கனை எங்கனம் போற்றுகின்றார் என்று பார்ப்போமா?

आनन्दरूपे निजबोधरूपे ब्रह्मस्वरूपे श्रुतिमूर्तिरूपे ।
शशाङ्करूपे रमणीयरूपे श्रीरङ्गरूपे रमतां मनो मे ॥१॥

ஆனந்த விடிவே, நிஜ போத வடிவே, (கனவு,நினைவு, உறக்கம் -ஆகிய 3 நிலைகளுக்கும் ஸாக்ஷிபூதமாக உள்ள ஆன்ம ஸ்வரூபம்) , பிரம்மத்தின் வடிவே, வேதங்களின் விழுப் பொருளே, சந்திரனைப் போன்ற குளுமையான வடிவினனே, அழகிய ரூபம் கொண்டவனே, திருவரங்கத்தின் உருவமானவனே உன் ரூபம் என் மனதை ஆனந்தத்தால் நிரப்புகின்றது!

திருப்பாணாழ்வார்    பாடிய அமலன் அதிப்பிரானை போலவே உள்ளது! ஆதி சங்கரர், பக்தியில் ஆழ்வார்களுக்கு  ஒப்பானவர். ஞானத்தில் உபநிஷதங்கள் சொல்லும் ரிஷிகளுக்கு சமானம் ஆனவர். அவர் பெருமைகளை கொண்டாட நமக்கு ஒரு நாவு இருந்தால் போதுமா?

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 




Image result for adi shankara and srirangam

No comments:

Post a Comment