ஜெகதாசார்யனான கண்ணன் ஒரு போதும் அஞ்ஞானத்தையும், மூட பக்தியையும் சொல்லவே மாட்டான். எப்படி ஒரு தாய் தன்னுடைய பிள்ளை எவ்வளவு அறிவிலியாக இருந்தாலும் அவனை, சரி செய்து புத்திசாலியாக மாற்ற நினைப்பாளோ, அதே போல கண்ணனும் பதினெட்டு யோகா முகாரிகளை உபதேசிக்கின்றான். உபநிஷத்து வாக்கியங்களை பிரதானமாகக் கொண்டு தான் அவன் சொல்கின்றான். வேத, தர்மம் சாஸ்திர, உபநிஷத்துக்கள் ஓவர் சாராம்சமே பகவத் கீதை. தன்னை ஆஸ்ரயிக்கும் பக்தன், மூடனாக ஆத்ம ஞானம் , விவேகம் அற்றவனாக இருப்பினும், கூட மூட் பக்தியால் தேவதைகளை உபாசித்து புண்ய லோகங்களை அடையட்டும் என்று உபதேசம் செய்த கருணைக்கடல் நம் கண்ணன். ஆனால், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடிப்பதை போல, மூடர்களோ, எங்கள் விவேகத்தை நாங்கள் பயன் படுத்தி ஆன்ம ஸ்வரூபத்தை அறியவே மாட்டோம் என்று திடமாக நம்புகின்றனர். கண்ணன், பலவாறாக ஞானத்தை போதிக்கியின்றான் கீதையில். வாருங்கள் அனுபவிப்போம்.
ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना।।4.24।।
ப்ரஹ்மார்ப்பணம் பிரம்மாஹவிர் பிரம்மாஅஃநௌ ப்ராஹ்மணாஹுதம்
ப்ரஹ்மய்வ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்மசமாதினா .. 4\-24..
சர்வம் கல்விதம் ப்ரம்மா - என்ற சுருதி வாக்கியத்தை கண்ணன், தேனைப் போல இங்கு பொழிகின்றான். வேள்வியில் உள்ள தீ,
வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ்ஸு, வேள்வியில் செய்யும் ஆஹுதி, என்று அனைத்தையும் ப்ரம்மமாகவே கண்டு, ப்ரம்மத்திற்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து அந்த ப்ரம்மதுல் பூர்ணமாக தன்னை விலை நிறுத்திக் கொள்பவனுக்கு , அந்த பிரம்மத்தை அடைதல் மிக சுலபம். அனைத்திலும் பிரம்மத்தை காணும் நிலை, வர உபாயம் சொல்கின்றார் கண்ணன்.
सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते।।4.27।।
ஸர்வான் இந்திரிய கார்மாணி பிராண கர்மாணி ச பரே .
ஆத்ம சம்யமா யோகாக்னௌ ஜுஹ்வதி ஞான தீபிதே 4.27
பொருள்: ஞானிகள், தங்களுடைய அனைத்து இந்திரியங்கள், வினைகள்,
பிராணன் என்னும் (5 வகை வாயுக்கள்) அனைத்தையும் ஆத்மாவில் அடக்குபவர்களாகி, ஞானாக்நியில் ஆகுதியாக அளிக்கின்றார்.
இதை விட ஞானத்தை எளிமையாக யாரேனும் சொல்லித் தர முடியுமா?
No comments:
Post a Comment