சத தூஷணி - இருப்பது மூன்றாவது வாதம் .......
ஸ்ரீ குருப்பியோ நமஹ
அடுத்து உள்ள இருப்பது மூன்றாவது வாதத்தில் , காயத்ரி மந்திரத்தை கொண்டு, அதன் அந்தரார்த்தமாக உள்ளவனும் விஷுவே என்றும் , ஆத்மா அல்ல என்றும் சொல்கின்றார் நம் தேசிகன். அதன் பொருள் கீழ் வருமாறு:
ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான நிலைமைகள் இருக்கும். அப்படி அவர்களுள் ஒளிரும் ஒளியானது தனிஇச்சை ஆனது அல்ல. அனைத்து சேதனம், அசேதனம் வஸ்துக்கள் உள்ளும் , அந்தர்யாமியாக உறையும் அந்த விஷ்ஹ்ணுவே சூரியனாக ஒலிக்கின்றன. அந்த திருமாலின் ஒளியை இந்த ஜீவன் (அஹம்) ஆகிய சேதனன் உபாசிக்கின்றான்.
தேசிகர் பேரறிஞர் என்றும், மணதார்த்தங்களை நன்கு அறிந்தவர் என்றும், பரம வைஷ்ணவே என்றும் நம்மால் அறிய முடிகின்றது.
ஆனால், காயத்ரி மாத்ரியம் சொல்லும் சூரியன் ஆத்மா தான். அந்த நாதமா, கணவனு நினைவு, உறக்கம் என்று மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது என்கிறது மாண்டூக்ய உபநிஷதம். அதே போல காயத்ரி மந்திரத்தை பற்றி ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் நிரம்ப சொல்ல பட்டு இருக்கின்றது. அங்கு ஒரு தலைப்பட்ட இறைவனை பற்றி சொல்லப்படவில்லை. புருஷன் என்னும் தத்வம் ஷிவா, விஷ்ணுக்கள் இருவருக்குமே பொருந்தும். ஸ்வேதாஸ்வதஹ்ரா உபநிஷதம் இதனை நன்கு உணர்த்துகின்றது.
காயத்ரி மந்திரத்தை 8 எழுத்துக்களாக பிரித்துக் கொண்டு, முதல் எட்டு எழுத்துக்கள் மூன்று லோகங்களே என்றும், அடுத்த எட்டு எழுத்துக்கள் மூன்று வேதங்கள் என்றும், கடைசி மூன்று எழுத்துக்கள் மூன்று வாயுக்கள் என்றும் கூறுகின்றது பிருஹத் ஆரண்யக உபநிஷதம். அந்த 24 எழுத்துக்களுக்கும் மேற்பட்ட ஒரு பதம் இருக்கின்றது என்றும், அதுவே சூரியனை போல பிரகாசிக்கின்றது என்றும், அது சத்தியத்தின் மீதே நிற்கின்றது என்றும் அந்த உபநிஷதம் கூறுகின்றது. அப்படியாக கனவு, நினைவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கு அப்பாலாகி , துரீய ஸ்திதியாக இருக்கும் ஆத்மாவே சூரியனாக பிரசிக்கின்றது எனபதே அதன் பொருள். ஆனால், இடம் , பொருள் ,ஏவல் ஆகிய மூன்றாயும் கடந்து மேலே சென்றாலே , பூரணமான அனுபூதி ஏற்பட்டு ஆத்மாவை அனுபவிக்க முடியும். இதனை யோசித்தலே விவேகம் அல்லது பகுத்தஹ்ரிவு எனப்படும். எனவே கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்ட வஸ்துக்களை உபநிஷதங்கள் ப்ரம்மம் என்று ஒரு பொழுதும் ஏற்கவே ஏற்காது.
நம் வைதிக மதத்தரிக்கு உபநிஷதங்களே பிரதானம். புராணங்களோ, மற்ற பாடல்களோ அல்ல. எனவே உபநிஷத் வாக்கியங்களை உள்ளதை உள்ளவாறே ஏற்க வேண்டும். அப்பொழுது மன மாயை விலகி, பூர்ண ஞானத்தால் ஆத்ம ஸ்வரூபம் விளங்கி உபநிஷத் வாக்கியங்கள் அனுபூதியால் தெளியும்.
No comments:
Post a Comment