இயம் கைவல்யமுக்திஸ்து கேநோபாயேந ஸித்³த்⁴யதி ।
மாண்டூ³க்யமேகமேவாலம் முமுக்ஷூணாம் விமுக்தயே ॥ 26॥
நால்வகை முத்திகளை பற்றி சொல்லி முடித்த ராமன், அந்த கைவல்ய முக்தியை அடைய, மாண்டூக்ய உபநிஷத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்கிறான். மோக்ஷத்தில் இச்சை உள்ள முமுக்ஷுக்கள், மாண்டூக்ய உபநிஷத்தை மட்டும் படித்தாலே போதும்.
ததா²ப்யஸித்³த⁴ம் சேஜ்ஜ்ஞாநம் த³ஶோபநிஷத³ம் பட² ।
ஜ்ஞாநம் லப்³த்⁴வா சிராதே³வ மாமகம் தா⁴ம யாஸ்யஸி ॥ 27॥
மாண்டூக்யத்தை மட்டும் படித்து ஞானம் சித்திக்காவிடின், முதற் பத்து உபநிஷத்துக்களை படி. அப்படி உபநிஷத்துக்களை படித்து பெரும் ஞானத்தால் நிரந்தரமாக எந்தனை அடைவாய்.
ததா²பி த்³ருʼட⁴தா ந சேத்³வித்³ஜ்ஞாநஸ்யாஞ்ஜநாஸுத ।
த்³வாத்ரிம்ஶாக்²யோபநிஷத³ம் ஸமப்⁴யஸ்ய நிவர்தய ॥ 28॥
முதற்பத்து உபநிஷதங்களை படித்து திடமான ஆத்ம ஞானம் - ஆன்மாவை பற்றிய அறிவானது கிட்டா விடின், முதல் முப்பத்தி இரண்டு உபநிஷதங்களை படிப்பதனால், அனைத்து ஐயங்களும் தீரும்.
விதே³ஹமுக்தாவிச்சா² சேத³ஷ்டோத்தரஶதம் பட² ।
தாஸாம் க்ரம ஸஶாந்திம் ச ஶ்ருணு வக்ஷ்யாமி தத்த்வத: ॥ 29॥
விதேஹ முக்தி - அதாவது, இந்த உடல் இல்லாமல் முக்தி அடைய ஒரு நூற்று எட்டு உபநிஷதங்களை படிக்க வேண்டும். அந்த உபநிஷதங்கள் வரிசை கீழ் வருமாறு - என்று பட்டியல் இடுகின்றான்.
ஏவமஷ்டோத்தரஶதம் பா⁴வநாத்ரயநாஶநம் ।
ஜ்ஞாநவைராக்³யத³ம் பும்ஸாம் வாஸநாத்ரயநாஶநம் ॥ 40॥
இப்படி ஒரு நூற்று எட்டு உபநிஷத்துக்கள் உடல், மனம் இந்திரியங்கள் என்ற மூன்று பாவனைகளையும், அழித்து ஞான , வைராக்கியங்களை அளித்து , மூன்று விதமான வாசனைகள் - லோக வாசனை, தேஹ வாசனை, சாஸ்திர வாசனை - ஆகிய அனைத்து வாசனைகளையும் அகற்றும்.
பூர்வோத்தரேஷு விஹிததத்தச்சா²ந்திபுர:ஸரம் ।
வேத³வித்³யாவ்ரதஸ்நாததே³ஶிகஸ்ய முகா²த்ஸ்வயம் ॥ 41॥
குருவின் திருவாக்கில் இருந்து , இல்லா விடின் சந்யாசிகள் இடத்திலோ இப்படி ஷாந்தி பாடம் போன்றவற்றை படிக்க வேண்டும்.
க்³ருʼஹீத்வாஷ்டோத்தரஶதம் யே பட²ந்தி த்³விஜோத்தமா: ।
ப்ராரப்³த⁴க்ஷயபர்யந்தம் ஜீவந்முக்தா ப⁴வந்தி தே ॥ 42॥
இருபிறப்பாளர்கள் இப்படி ஒரு நூற்று எட்டு உபநிஷதங்களை படிப்பதனால், இந்த உலகியல் வாழ்க்கை என்ற ப்ராரப்தம் அழிந்து அவர்கள் ஜீவன் முக்தர்கள் ஆகின்றனர். அதாவது தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்தவர்களாகி, ஜீவ பேதத்தை ஒழித்தவர்களாகி, தங்கள் ஆத்மாவை உணர்ந்தவர்களாகி ஜீவ பேதத்தில் இருந்து விடுதலை பெறுகின்றார்கள்.
தத: காலவஶாதே³வ ப்ராரப்³தே⁴ து க்ஷயம் க³தே ।
வைதே³ஹீம் மாமகீம் முக்திம் யாந்தி நாஸ்த்யத்ரஸம்ஶய: ॥ 43॥
அப்படியே காலப்போக்கில் அவர்கள் , ப்ராரப்தம் என்பது அழிந்து, விதேஹ முக்தி அடைந்து ப்ரம்மத்துள் கலந்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஸர்வோபநிஷதா³ம் மத்⁴யே ஸாரமஷ்டோத்தரஶதம் ।
ஸக்ருʼச்ச்²ரவணமாத்ரேண ஸர்வாகௌ⁴க⁴நிக்ருʼந்தநம் ॥ 44॥
பல (ஆயிரம்) உபநிஷத்துக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நூற்று எட்டு உபநிஷத்துக்கள் அனைத்து உபநிஷத்துக்கள் சாரம். இந்த ஒரு நூற்று எட்டு உபநிஷத்துக்களை கேட்ட மாத்திரத்திலேயே அனைத்து பாபங்களும் துலைந்து விடும்.
ஜ்ஞாநதோঽஜ்ஞாநதோ வாபி பட²தாம் ப³ந்த⁴மோசகம் ।
ராஜ்யம் தே³யம் த⁴நம் தே³யம் யாசத: காமபூரணம் ॥ 45॥
பூர்ண ஞானத்துடனோ, பூர்ண ஞானம் இல்லாமலோ படித்தாலும் இந்த உபநிஷத்துக்கள் உலகியல் பற்றை (பந்தம்) நாசம் செய்யும். ராஜ்ஜியம், செல்வம் எதனை வேண்டுமானாலும் தரலாம்.
இத³மஷ்டோத்தரஶதம் ந தே³யம் யஸ்ய கஸ்யசித் ।
நாஸ்திகாய க்ருʼதக்⁴நாய து³ராசாரரதாய வை ॥ 47॥
ஆனால் இந்த நூற்று எட்டு உபநிஷதங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு எல்லாம் அளித்து விட முடியாது. நாஸ்தீகர்கள், நன்றி மறந்தவர்கள், ஒழுங்கீனமானவர்கள் - இவர்களுக்கு எக்காரணத்தி கொண்டு இந்த உபநிஷதங்களை கற்று தர கூடாது.
மத்³ப⁴க்திவிமுகா²யாபி ஶாஸ்த்ரக³ர்தேஷு முஹ்யதே ।
கு³ருப⁴க்திவிஹீநாய தா³தவ்யம் ந கதா³சந ॥ 48॥
பக்திக்கு எதிரானவன், தப்பான சாஸ்திரங்களால் மதி இழந்தவன், குருபக்தி இல்லாதவன் - இவர்களுக்கு இந்த உபநிஷதடி ஒருக்காலும் சொல்லித் தரக் கூடாது.
ஸேவாபராய ஶிஷ்யாய ஹிதபுத்ராய மாருதே ।
மத்³ப⁴க்தாய ஸுஶீலாய குலீநாய ஸுமேத⁴ஸே ॥ 49॥
பக்தர்கள், நல்லொழுக்கம் உள்ளவர்கள், சேவை செய்பவர்கள், சீடர்கள், நற்குலத்தில் பிறந்தவர்கள், நல்ல புத்தி உடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த நூற்று எட்டு உபநிஷதங்கள் கற்று தரப்படலாம்.
ஸம்யக் பரீக்ஷ்ய தா³தவ்யமேவமஷ்டோத்தரம் ஶதம் ।
ய: படே²ச்ச்²ருʼணுயாத்³வாபி ஸ மாமேதி ந ஸம்ஶய: ।
மாணவனுக்கு உண்மையிலேயே சிரத்தை இருக்கின்றதா என்று பரீக்ஷித்து விட்டு, பிறகு தான் சொல்லித் தர வேண்டும்.
ததே³தத்³ருʼசாப்⁴யுக்தம் ।
வித்³யா ஹ வை ப்³ராஹ்மணமாஜகா³ம
கோ³பாய மா ஶேவதி⁴ஷ்டீঽஹமஸ்மி ।
அஸூயகாயாந்ருʼஜவே ஶடா²ய
மா மா ப்³ரூயா வீர்யவதீ ததா² ஸ்யாம் ।
யமேவ வித்³யாஶ்ருதமப்ரமத்தம்
மேதா⁴விநம் ப்³ரஹ்மசர்யோபபந்நம் ।
தஸ்மா இமாமுபஸந்நாய ஸம்யக்
பரீக்ஷ்ய த³த்³யாத்³வைஷ்ணவீமாத்மநிஷ்டா²ம் ॥ 1॥ இதி ॥
இப்படி, யாருக்கு வேதங்களை சொல்லி தர வேண்டும் என்பதை பற்றிய வேத வாக்கியத்தை ராமர் இங்கு உறைக்கின்றார். வித்யை ஆனவள், ப்ராம்மணனிடத்தில் வந்து, கீழ் வருமாறு கூறினாள். "நான் உன்னுடைய சொத்து. எந்தனை காப்பாற்ற வேண்டியது உந்தன் கடமை. எனவே பொறாமை கொண்டவர்கள், வஞ்சகர்கள், பொய்யர்கள் - ஆகியோருக்கு எந்தனை சொல்லி தர கூடாது. தீர பரிக்ஷித்த பிறகு மேதாவிகளுக்கும், ப்ரஹ்மச்சாரிகளுக்கும் சொல்லி தரலாம்."
No comments:
Post a Comment