Sunday, April 1, 2018

முத்தீயும் அக்னிஹோத்ரமும் ...

வேதத்திலும், இல்வாழ்வார்களுக்கு சொல்லப் பெற்ற சாஸ்திரங்களிலும் ஏழு விதமான ஹவிர் (உணவால்) வேள்விகள் சொல்லப் பட்டுள்ளது.
கீழ் கூறிய ஹவிர் யஞகளுக்கு முத்தீ (த்ரேதாக்னி) வேண்டும். இவர்கள் ஆயுட்காலம் முழுவதும் இப்படி முத்தீயை வழிபாட்டுக்கு கொண்டே இருப்பார்கள்.

முத்தீ  என்பது இவையே:



  1. கார்ஹபத்யாக்னி  - சமையலுக்கு எடுத்து செல்ல வேண்டிய தீ, இந்த தீயில் தான் புரோடாக்ஷம் என்னும் பாதத்தை சுட்டு ("bake") செய்து அக்னிக்கு படைப்பார்கள்.
  2. தக்ஷிணாக்னி - தெற்குத்தீ - இந்த தீயில் தான் முன்னோர்களுக்கு வேள்வி செய்வார்கள். கணவன் , மனைவியரில் எவர் முதலில் இறந்தாலும் இந்த தீயைக் கொண்டு தான் அவர்களை தகனம் செய்வார்கள். (மனைவி இருந்தால் தான் கணவனுக்கு அக்னிகார்யம் செய்யும் அருகாகத்தை உண்டு. )
  3. ஆவஹனீயம் - இது சதுரமான குண்டம், கிழக்கு நோக்கி இருக்கும். இந்த தீயில் தான் தேவர்களுக்கு வேள்வி செய்ய வேண்டும்.

இனி, இந்த முத்தீயில் செய்யப்பட வேண்டிய ௨௧ வேள்விகளில் , உள்ள ஹவிர் வேள்விகள் (ஹவிஸ்ஸு என்னும் உணவால் செய்யும் வேள்விகள்) என்ன என்பதை பற்றி இங்கே காண்போம்:


  1. அக்னிஹோத்ராம்  - தினமும் இரு வேளை செய்யும் வேள்வி.
  2. தர்ஷ-பூர்ணமாசேஷ்டி - அம்மாவாசை, பௌர்ணமி முடிந்த பிறகு செய்யும் வேள்விகள்.
  3. அஃராயணேஷ்ட்டி  - அறுவடை முசிந்து புதிய நெல்லை கொண்டு (மார்கழி/தாய்) மாதத்தில் செய்யும் வேள்வி 
  4. பிண்ட-பித்ருயஞம்   - தக்ஷிணினாக்னி   என்னும் தீயில் இறந்தோர்களுக்கு செய்யும் வேள்வி.
  5. சாதுர்மாஸ்யனி  - சாதுர்மாஸ்ய   காலத்தில் (மழை காலத்தில்) செய்யும் வேள்வி 
  6. நிரூட-பஷுபந்தம்  - ஆட்டு கிடாய் பாலி கொடுத்து தேவர்களுக்கு செய்யும் வேள்வி.
  7. ஸுத்ராமணி  - பலி கவர் கிராம தேவதைகளுக்கு சாராயம், சுருட்டு போன்றவை இட்டு படைக்கும் வேள்வி.


நிரூட-பஷுபந்தம் - இந்த வேள்வியில் பலியிடப்படும் ஆட்டினிடத்தில்   , யூபஸ்தம்பம் எனும் கம்பத்தில் கட்டப்பட்ட ஆட்டினிடத்தில் , அந்த எஜமானன் அனுமதி பெற்று பிறகு பலி இடுவான். அப்படி தன்னை தியாகம் செய்யும்   ஆடு, தான் மாட்டும் அன்றி தன் மந்தையில் உள்ள அனைத்து ஆட்டுக்களுக்கும் முக்தி நிலை பெற்று தருகின்றது. சாமானியமாக கசாப்பு வெட்டுவதை போல அன்று இது - அந்த ஆட்டின் வயிற்றுப பகுதியை வேள்வி தீயில் தேவர்களுக்கு பலியிடுவர். பிறகு அந்த தீயில் வெந்த வரையில் (மாமிசத்தில்) ஒரு கடுகளவு உண்பர். (வேள்வியில் அளிக்கப்பெறும் மாமிசத்தை நிராகரித்தல்   மகா பாபம் என்று சொல்கின்றது தர்ம சாஸ்திரம்). ஆனால் இன்றய தினங்களில் ஆட்டின் உருவத்தை மாவால் செய்து பலி கொடுக்கின்றனர்.

வேதங்கள் நமக்கு காட்டி தந்த மார்க்கம் ஒரு பொழுதும் தீமையை போதிக்காது. உலகம் வாழ, தேவர்களை வேண்டி, மழை , சுபிக்ஷம் வேண்டி இப்படி முத்தீயை வணங்கிய ப்ராம்மணர்களுக்கு அரசர்கள் நிறைய பொன்னும் பொருளும் அளித்தார்கள். கலி மாயை - அவர்கள் வாழ்வாதாரம் இன்றி, தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது இன்று. வேத வேள்விகள் செழித்தால் நம் நாடும், நிலமும் செழிக்கும்.

No comments:

Post a Comment