ஆதி சங்கரர் பகவத்பாதர் , இந்த உலகத்தில் வேதாந்தத்தை நிலை நாட்ட
அவதரித்த புண்ய புருஷர். சாந்தோக்கிய உபநிஷதத்தில் வரும் இந்த ஸ்லோகத்தில், தாமரையின் நிறத்துக்கு குரங்கின் பின்புறத்தை உவமை காட்டி இருக்கின்றார் உபநிஷத்தில். இந்த உவமை தாமரையின் நிறத்திற்க்கே என்று உறுதி செய்கின்றார் பகவத்பாதர். அந்த தாமரையின் இதழ்களை ஒத்த
கண்களை உடைய புருடன் பொன்னிறமாக, சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரகாசிக்கின்றான் என்கின்றது இந்த உபநிடதம். இதில் சிவன், விஷ்ணு இருவரையும் இது குறிக்கும் - சிவனோ செந்நிற மேனியை உடையவர். விஷ்ணுவோ தாமரை கண்ணை உடையவர். எனவே பேதமும் அபேதமும், சைவ வைணவர் பேதமமும் பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது. வேதங்களும், உபநிஷத்துக்களும் ஒரு பொழுதும் பேதத்தை போதிக்கத்து.
நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உபநிஷத்துக்களை ஆதாரமாக கொண்ட ஒரே
சித்திதாந்தம் அத்துவைத சித்திதாந்தம். அத்துவைதம் என்ற பதமே மாண்டூக்ய உபநிஷத்தில் இரண்டு முறை வருகின்றது.108 உபநிஷத்துக்களில் பெரும்பாலானவை ஆன்ம அறிவையும், ஆத்ம ஸ்வரூபத்தையும் போதிக்கின்றன. அப்படி ஆனால், தெய்வ வழிபாடு எதற்கு என்று நமக்கு தோன்றும். தன்னுள் ஒளிரும் அந்த ஆத்ம போதமே, கண்ணனாகவும், சிவனாகவும் ஒளிர்கின்றன என்று இருமை இல்லாது, எல்லாவற்றிலும் அந்த ஆத்ம போதத்தையே காண்பார்கள் ஆத்ம ஞானிகள். அதனை விளக்கும் மகா வாக்கியங்கள் நான்கு வேதத்திலும் காண படுகின்றன. தொடரும்....
No comments:
Post a Comment