வேதாந்தம் என்பது எல்லையற்ற அந்த பிரம்மத்தை அனுபவிப்பதே. அனைவருக்கும் அந்த பூர்ண ஞானம் என்பது லபித்து விடுவது இல்லை. வேதாந்த தேசிகர் மிக சிறந்த பக்தர். ஆனால், அவர் சத தூஷணி என்று அத்துவைத்ததை பற்றி ஒரு நூறு குற்றங்களை ஒரு நூலாக எழுதி உள்ளார். இது பிரமாணங்களை இடையே உள்ள சண்டை தான். மனிதர்களுக்கோ, தெய்வங்களுக்கோ இடையில் உள்ளது அல்ல.
சங்கர ஜெயந்தியை முன்னிட்டு , ஒரு சில தூஷணைகளுக்கு பதிலளிக்கும் ஒரு சிறு பிரயத்தனம். மஹாபெரியவா சரணங்களிலும் , ஆதி சங்கரர் சரணங்களிலும் நமஸ்கரித்து இதனை துவங்குவோம்.
परिणामयति विश्वं यस्स्वयं निर्विकार:
परिणमति च योसौ तत्तदर्था अन्तरात्मा
विषम विषय तृष्णा धन्व कान्तार जातं
व्यपनय तु भयं मे विश्व जिष्णो स्व विष्णु:
किं च किमिदं निर्विकारत्वं नाम ? किं उत्तरावदि: आहित्यम्?
தேசிகன் இந்த ஸ்லோகத்தில் கீழ் வருமாறு வினவுகின்றார்:
இந்த உலக (மாயைக்கு) அப்பாற்பட்டது நிர்விகாரம். அந்த மாற்றத்தை உண்டாக்குவது நம்முள் இருக்கும் அந்தராத்மா. காட்டு கரும்பின் விஷம் மிகுந்த சுவையில் பேராசை கொண்டிருக்கும் எனக்கு பயத்தை நீக்குபவனாக இந்த உலகத்தை வென்ற விஷ்ணு இருக்கின்றான்.
நிர்விகாரத்துவம் என்றால் என்ன? அதன் பொருள் என்ன? அந்த அஹிதமான நிர்விகாரத்திற்கு வாதிடுவோர் யார்?
இந்த கேள்விக்கு உபநிஷதங்கள் விடை அளிக்கின்றன. அதாவது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் நேதி நேதி என்று உள்ளது. ஐம்புலன்கள், மனம் ஆகியவற்றால் உணர கூடியவைகள் அனைத்துமே ஆத்மா ஆகாது. அவற்றை அனாத்மா என்று கூறுவார். அவற்றை விலக்கிக் கொண்டே சென்றால், எது மிஞ்சி இருக்கின்றதோ அதுவே நிர்விகார ப்ரம்மம். விகாரம் என்றால் மாறுதலுக்கு உட்பட்டது என்று பொருள்படும், கால, தேச ,வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்ட வஸ்துவே ப்ரம்மம் என்பதால் , அது நிர்குணமானது , நிர்விகாரமானது. உபநிஷதங்களும் இவ்வாறே போதிக்கின்றன. சாந்தம், சிவம், அத்வைதம், அசிந்த்யம், அக்ராஹ்யம் என்று
நிர்குண பிரம்மத்தை மாண்டூக்கிய உபநிஷத்து போதிக்கின்றது.
ஆச்சார்யாள் அனுகிருஹதால் இந்த நிர்விகாரத்தை பற்றிய விளக்கம் பூர்த்தி.
No comments:
Post a Comment